Sunday, July 3, 2011

EN VAALKAI....

நான் வாழ்க்கையை தேடி சென்றேன் ..... ஆனால் என் மனம் பாதையை மறந்தது... மனம் நம்பியதெல்லாம் தப்பாகி போய்விட்டது,,,

எனக்கான வாழ்க்கை ஒரு போராட்டம்...

என் மனம் ஒரு உயிரை தாங்குவதால் என்ன செய்வதென்று தெரியாமல் 
தடுமாறுகிறது.....

எதை நம்புவது என்று தெரியாமல் தவிக்கிறது... 

                           என்னால் எழுதகூட முடியவில்லை...


Saturday, January 1, 2011

PUTHTHANDIL NAAN.......

 இனிய புத்தாண்டு.... 
2010  அஸ்தமித்து  2011  உதயமானதில் 
நான் புதிதாக பிறந்துள்ளேன்.. 

இன்று என் நண்பர்கள் என் நினைவுடன் இருப்பதை 
உணர்ந்தேன்...
ஆனால் என் பிரியாவும் , நானும் தொடர்பு 
கொள்ள எந்த முகவரியும், தொடர்பு சாதனமும் இல்லாமல் 
காலம் அழித்து  விட்டது...
ஆனாலும் என் மனத்தால் அவளை நான் வாழ்த்தினேன்...


ஆனால் எப்பொழுதும் என்னிடம் நன்றாக பேசும் என் நண்பன் 
அன்று ஏனோ அதிக வேலையாக இருந்தான்..
இவன் name ஷக்தி. 
என் மனம் ஒருவரால் காயப்பட்டு இருந்த காலத்தில் 
ஆறுதலாக இருந்தான்...
ஷக்திக்கு என்னை பற்றி எல்லாமே தெரியும். 

நான் தாய் பாசத்துக்கு ஏங்குபவள்....
அவனும் அப்படிதான்...
அடுத்த ஜென்மம் எடுத்தா எனக்கு என்னவாக ஆவ நு அவன் கேட்டான்..
நான் "உன் தாய் ஆகுவேன்.." என்று கூறினேன்..

ஆனால்  நான் என் மனதை 'தியா'கம் செய்து ஏமாந்த பொழுது 
என் அழுகையை போக்கியதே அவன் தான்..
அந்த வகையில் அவன்தான் என் தாய்.
அவனுக்கு நான் தாயாக நினைத்து.. அவன் எனக்கு தாயாகி விட்டான்....

ஆனால் என் தாய் ஸ்தானத்தில் இருப்பதாலோ என்னவோ அவனை என்னால் கற்பனையிலேயே காண முடிகிறது.....
ஆம் நான் அவனை பார்த்ததில்லை..
 

Saturday, December 25, 2010

EN KAALLOORI VAALKAI...

நான் ப்ரியாவை பிரிய காரணம் என் கல்லூரி படிப்பு தான் ... என் தூரத்து சொந்தம் சொன்னதால கருர்க்கு  படிக்க போனேன்..

நான் பள்ளியை   விட்டு  வெளி வந்த அன்று  நடந்ததை என்னால்  மறக்க முடியாது..
அன்றுதான் என் அம்மாவை நான் எதுர்த்து பேசினேன்.. எனக்காக கல்யாணம் பண்ணி என்னை விட்டுட்டு போயிட்டியே  அம்மான்னு ... அந்த வார்த்தைக்காக என் அம்மா வருத்தபட்டதாக தெரியவில்லை   .. அதுக்கு அப்பறமும் என் அம்மாகூட நான் இல்லை
...
நான் கரூர்ல ஒரு தனியார் மகளிர் கல்லூரியில் படிச்சேன்..

கல்லூரி விடுதியில்     தங்கி படிச்சேன்.. அங்க PARENTS DAY  அன்னைக்கு எல்லாருடைய PARENTS  M  வருவாங்க .. எனக்கு என் பெரியப்பா , பெரியம்மா வருவாங்க...
அதெல்லாம் வேதனைய இருந்துச்சு..

அங்கதான் எனக்கு தாய்போல பாசம் காட்ட ஒருத்தி வந்தா.. பாரதி ..
அழகா இருப்பா .. கவிதை SUPER AH எழுதுவா.. என் மேல உயிரை இருப்பா.. நான் சொல்லுவேன்.. உன் கல்யாணத்துக்கு நான் வரமாட்டேன்னு .. எதுக்குன்னா அது அவ என்னை விட்டு பிரியற நாள்னு...

எனக்காகவே அவ நெறைய கவிதை  எழுதிருக்கா....
அவளோட கண்ணு அழகா இருக்கும்... அவ      B .COM (CA )..
நான் தான் அவ மேல பாசமா இருக்கற மாதிரி தெரியும்.. உண்மையா அவ தான் என் மேல பாசமா இருப்பா.. வெளிக்கட்டிக்க மாட்ட. நாங்க பிரிஞ்ச நாளை என்னால் மறக்க முடியாது.

இனி பார்க்க நேர்ந்தாலும் .. பார்க்க மாட்டேன் ..
மறுபடியும் அவளை பிரிய என் மனதில் தைரியம் இல்லை.

NATPU

நான் சந்தோசமாக இருக்கும் ஒவ்வொரு தருனத்திறக்கும் 
நட்புதான் அதிக காரண மாக இருக்கும்.

என் பள்ளி காலங்களில் எனக்காக என்னவேனாலும்செய்யும் என் தோழி பிரியா ... 
   இன்று நான் அவளுடைய நினைவில் மட்டுமே இருக்கிறேன்.. முதன் முதலாக எனக்காக அழுத அவளை என் உயிர் உள்ளவரை மறக்கமாட்டேன்.
 அவள் நிலைமை எந்த பெண்ணிற்கும்  வரகூடாது..

கூட பொறந்த தம்பியே சந்தேக பட்டு பேசும் சூழ்நிலையில் வாழ்பவள்.. அவளுக்கு நான் மட்டுமே அன்று ஆறுதல்.. என்னிடம் சொல்லி அழும்போது என் மனம் அவளுக்காக எதுமே செய்யமுடியவில்லையே என்று அழும்...

நான் பெற்றவள் என்னை உதாசினபடுத்தியதால் வேதனை படுகிறேன் என்றால் .. அவள் பெற்றவள் வாயினாலேயே கேவலப்படும் ஜீவன்..
 இன்றும் அவளை நினைத்தால் என் கண்களில் கண்ணீர்...

அவளை நான் மறுபடியும் சந்திக்க கடவளிடம் பிரார்த்திக்கிறேன்...
எங்கு இருக்கிறாள் என்று தெரிய வில்லை..
 நான் சந்தோசப்படுவது இந்த நட்பால் தான் ...
வேதனை படுவதும் இந்த நட்பால் தான்.

Tuesday, December 14, 2010

ENNAIPATRY

நான் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட பெண்.... ஆகையால் தான் என் அளவில்லா துன்பங்களை தாங்கும் சக்தி எனக்கிருக்கிறது.....

என் தாயின் வாழ்க்கை இரு கண்களை போன்றது....

அதில் ஒரு கண்ணின் ஒழி தான் நான்...
நான் உலகை பார்த்ததும் அந்த கண் அஸ்தமித்து போய்விட்டது.......

என் தாய் இன்று உலகில் வாழ துணையாக இருப்பது மற்றொரு கண்....