Sunday, July 3, 2011
Saturday, January 1, 2011
PUTHTHANDIL NAAN.......
இனிய புத்தாண்டு....
2010 அஸ்தமித்து 2011 உதயமானதில்
நான் புதிதாக பிறந்துள்ளேன்..
இன்று என் நண்பர்கள் என் நினைவுடன் இருப்பதை
உணர்ந்தேன்...
ஆனால் என் பிரியாவும் , நானும் தொடர்பு
கொள்ள எந்த முகவரியும், தொடர்பு சாதனமும் இல்லாமல்
காலம் அழித்து விட்டது...
ஆனாலும் என் மனத்தால் அவளை நான் வாழ்த்தினேன்...
ஆனால் எப்பொழுதும் என்னிடம் நன்றாக பேசும் என் நண்பன்
அன்று ஏனோ அதிக வேலையாக இருந்தான்..
இவன் name ஷக்தி.
என் மனம் ஒருவரால் காயப்பட்டு இருந்த காலத்தில்
ஆறுதலாக இருந்தான்...
ஷக்திக்கு என்னை பற்றி எல்லாமே தெரியும்.
நான் தாய் பாசத்துக்கு ஏங்குபவள்....
அவனும் அப்படிதான்...
அடுத்த ஜென்மம் எடுத்தா எனக்கு என்னவாக ஆவ நு அவன் கேட்டான்..
நான் "உன் தாய் ஆகுவேன்.." என்று கூறினேன்..
ஆனால் நான் என் மனதை 'தியா'கம் செய்து ஏமாந்த பொழுது
என் அழுகையை போக்கியதே அவன் தான்..
அந்த வகையில் அவன்தான் என் தாய்.
அவனுக்கு நான் தாயாக நினைத்து.. அவன் எனக்கு தாயாகி விட்டான்....
ஆனால் என் தாய் ஸ்தானத்தில் இருப்பதாலோ என்னவோ அவனை என்னால் கற்பனையிலேயே காண முடிகிறது.....
ஆம் நான் அவனை பார்த்ததில்லை..
Subscribe to:
Posts (Atom)


