நான் பள்ளியை விட்டு வெளி வந்த அன்று நடந்ததை என்னால் மறக்க முடியாது..
அன்றுதான் என் அம்மாவை நான் எதுர்த்து பேசினேன்.. எனக்காக கல்யாணம் பண்ணி என்னை விட்டுட்டு போயிட்டியே அம்மான்னு ... அந்த வார்த்தைக்காக என் அம்மா வருத்தபட்டதாக தெரியவில்லை .. அதுக்கு அப்பறமும் என் அம்மாகூட நான் இல்லை
...
நான் கரூர்ல ஒரு தனியார் மகளிர் கல்லூரியில் படிச்சேன்..
கல்லூரி விடுதியில் தங்கி படிச்சேன்.. அங்க PARENTS DAY அன்னைக்கு எல்லாருடைய PARENTS M வருவாங்க .. எனக்கு என் பெரியப்பா , பெரியம்மா வருவாங்க...
அதெல்லாம் வேதனைய இருந்துச்சு..
அங்கதான் எனக்கு தாய்போல பாசம் காட்ட ஒருத்தி வந்தா.. பாரதி ..
அழகா இருப்பா .. கவிதை SUPER AH எழுதுவா.. என் மேல உயிரை இருப்பா.. நான் சொல்லுவேன்.. உன் கல்யாணத்துக்கு நான் வரமாட்டேன்னு .. எதுக்குன்னா அது அவ என்னை விட்டு பிரியற நாள்னு...
எனக்காகவே அவ நெறைய கவிதை எழுதிருக்கா....
அவளோட கண்ணு அழகா இருக்கும்... அவ B .COM (CA )..
நான் தான் அவ மேல பாசமா இருக்கற மாதிரி தெரியும்.. உண்மையா அவ தான் என் மேல பாசமா இருப்பா.. வெளிக்கட்டிக்க மாட்ட. நாங்க பிரிஞ்ச நாளை என்னால் மறக்க முடியாது.
இனி பார்க்க நேர்ந்தாலும் .. பார்க்க மாட்டேன் ..
மறுபடியும் அவளை பிரிய என் மனதில் தைரியம் இல்லை.

No comments:
Post a Comment